என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஐ.ஐ.டி. மாணவர்கள்
நீங்கள் தேடியது "ஐ.ஐ.டி. மாணவர்கள்"
சம்மதத்துடன் ஈடுபடும் ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது என ஐ.ஐ.டி. மாணவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். #IITStudent #SupremCourt
புதுடெல்லி:
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு இயற்கைக்கு மாறாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது. மேலும் ஓரினச் சேர்க்கை சட்டப்படி கிரிமினல் குற்றம் என்பதை சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு உறுதி செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஐ.டி. மாணவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். அதில், ஒருவரின் சம்மதத்துடன் ஈடுபடும் ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றமாக்கி இருப்பது இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமை, கண்ணியம், சுதந்திரம், உணர்வு வெளிப்பாடு ஆகியவற்றுக்கு தடை போடுவதாக உள்ளது. எனவே இதை குற்றச் செயலாக்கி இருப்பதை தடை செய்யவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற ஒரு மனுவை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #IITStudent #SupremCourt

×

X